Close
மே 21, 2025 4:06 காலை

சாலையோரம் வீசப்பட்டு கிடந்த ஈரோடு அரசு மருத்துவமனை மாத்திரைகள்: அதிகாரிகள் விசாரணை

ஈரோடு தில்லை நகர் தெப்பக்குளம் வீதியில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் சாலையோரத்தில் வீசப்பட்டுக் கிடந்தன. இந்த மாத்திரைகளின் காலாவதி தேதி 2025ம் ஆண்டு வரை உள்ளவை ஆகும்.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்ததை யடுத்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த மாத்திரைகளை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் குறித்து மருத்துவரிடம் விசாரிக்கையில், அந்த மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகள் என்பது தெரிய வந்தது.

இந்த மாத்திரைகள் ஏன் அங்கு வீசப்பட்டது? அவை ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட வேண்டிய மாத்திரைகளா? என்பது குறித்தும் மாத்திரைகளை இந்தப் பகுதியில் யார் வீசி சென்றனர் என்பது குறித்து ஈரோடு மாநகராட்சி நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top