Close
நவம்பர் 28, 2024 1:48 மணி

நாமக்கல் – கீரம்பூர் ரோடு : கலெக்டர் நேரடி ஆய்வு..!

நாமக்கல் - கீரம்பூர் ரோடு மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் உமா

நாமக்கல் :

நாமக்கல் – கீரம்பூர் ரோடு ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. அந்தப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட, நாமக்கல் – திண்டமங்கலம் – கீரம்பூர் ரோடு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து கீரம்பூர் அருகே, சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது.

மேலும், இது தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நாமக்கல் – திருச்செங்கோடு ரோட்டை இணைக்கும் முக்கிய ரோடாகும். இந்த ரோட்டின் மூலம், கீரம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் பள்ளி, கல்லூரி பஸ்கள் மற்றும் கோழி தீவன லாரிகள் போன்ற வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

அதனால் இந்த ரோடு போக்குவரத்து நிறைந்த மிக முக்கியமான மாவட்ட ரோடாகும். இது 3.75 மீ அகலம் உடையது. இந்த ரோட்டில் 5 இடங்களில் உள்ள குறுகலான பகுதி, பள்ளமான பகுதி மற்றும் வளைவான பகுதிகளில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில், நாமக்கல் – திண்டமங்கலம் – கீரம்பூர் ரோட்டில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மாவட்ட கலெக்டர் உமா, திண்டமங்கலம் – கீரம்பூர் ரோட்டில் தலா ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் 60 மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நாமக்கல் – திண்டமங்கலம் – கீரம்பூர் ரோட்டில் தலா ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் மேலும், 3 இடங்களில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top