Close
நவம்பர் 28, 2024 3:53 மணி

சீமான் நடவடிக்கையை கண்டித்து நாமக்கல்லில் நாதக நிர்வாகி உள்ளிட்ட 50 பேர் விலகல்..!

நாமக்கல் மாவட்ட நாதக முன்னாளர் மாவட்ட செயலாளர் வக்கீல் வினோத்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நாமக்கல்:
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகினார்கள்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட நாதக முன்னாள் செயலாளர் வக்கீல் வினோத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தேன். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவார், மதச்சார்பற்ற அரசு அமைய அவர் நடவடிக்கை எடுப்பார் என நினைத்து சுமார் 12 ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றினேன்.

கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக சீமானின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது. அவர் கட்சி நிர்வாகிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்.

நான் மட்டும் கட்சியில் இருந்தால் போதும், ஓட்ட விழும் என நிர்வாகிகளை மரியாதை இல்லாமல் பேசுகிறார். மதச்சார்பின்மை பேசிவிட்டு, தற்போது மதச்சார்பு உள்ள ஒரு கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார்.

இதைக்கண்டித்து ஏற்கனவே பல மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினார்கள். இந்த நிலையில் கடந்த கடந்த 2021ம் ஆண்டு திடீரென்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் பதவியையும் பறித்துவிட்டார்.

பல முறை அவரை சந்தித்து நேரில் பேச முயற்சித்தேன். அவரை சந்திக்க அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் கட்சியில் இருந்து, நான் மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணியினர் உள்ளிட்ட சுமார் 50 பேர் இன்று விலகுகிறோம். மேலும் பலர் கட்சியில் இருந்து விலக தயாரக உள்ளனர். வேறு கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top