Close
டிசம்பர் 4, 2024 7:06 மணி

திருச்சியில் த.மா.கா கட்சியின் 11ம் ஆண்டு துவக்கவிழா கொண்டாட்டம்

திருச்சி அருகே பு்ங்கனூர் கிராமத்தில் தமாகா 11ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய எம்.பி.யான ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது. இக்கட்சியின் 11ம் ஆண்டு துவக்க விழா தமிழ்நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  புங்கனூர் கிராமத்தில் மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் 11ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மேற்கு மாவட்ட தலைவருமான கே.டி. தனபால் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

வட்டார தலைவர்கள் அந்தோணிசாமி, ரங்கபாஷ்யம்,  மல்லியம் பத்து பன்னீ்ர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் மதிவாணன், மாநில செயற்குழு விசேஷ அழைப்பாளர் சமுத்திரம் கணேசன்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

வட்டார தலைவர்கள் மோகன்தாஸ், ராமகிருஷ்ணன், ஆனந்த், ரகுராம், சுப்பையா, அண்ணாதுரை பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில்  மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரகுநாதன் நன்றி  கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top