Close
டிசம்பர் 5, 2024 2:35 காலை

திருச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை

வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணி ஆணை வழங்கினார்.

திருச்சி  சேஷாயி தொழில்நுட்ப பள்ளி வளாகத்தில் இன்று வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு  திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும்  அன்பில் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள்  நேர்முக நேர்வினை நடத்தினார்கள்.

இந்த முகாமில் தமிழக  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டி, சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார். மாநகராட்சி மண்டல தலைவர் மதிவாணன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சுரேஷ், துணை இயக்குநர் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மகாராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .எஸ்.மாசில் ஆஷா, சேஷாயி தொழில்நுட்ப பயிலகத்தின் நிர்வாகி ரவீந்திரன், தனியார் துறை நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top