Close
டிசம்பர் 5, 2024 2:17 காலை

நிவாரண பொருட்களுடன் சென்னைக்கு புறப்பட்ட திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்

திருச்சியில் இருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்ட வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து உள்ளது. தொடர் மழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. நகரின் பல பகுதிகளில் மக்கள் வீட்டை வி்ட்டு வெளியே வர முடியாமல் தவி்த்து வருகிறார்கள்.

வெள்ள நீரை வடிய செய்வதற்காகவும், நிவாரண பணிகளை செய்வதற்காகவும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு பெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு 150 தூய்மை பணியாளர்கள் , 5 சுகாதார ஆய்வாளர்கள்,10 தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் இன்று இரவு தனி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் மழைநீர் உறிஞ்சுவதற்காக 10 ஹெச்பி மோட்டார்கள்,6100குடிநீர் பாட்டில்கள்,1350 பிஸ்கட் பாக்கெட்கள், 2850 பிரட்கள் , 4150 கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் ஆகியவற்றையும் திருச்சி  மாநகராட்சி சார்பில்  மேயர் மு. அன்பழகன், ஆணையர் சரவணன் ,ஆகியோர் அனுப்பி வைத்தார்கள்.

திருச்சி மாநகராசியில் இருந்து இளநிலை பொறியாளர்கள் இரண்டு பேர் மற்றும் ஊழியர்கள் ஐந்து பேருடன்,ஒரு டிப்பர் லாரியில்,10 குதிரை திறன் கொண்ட 3 நீர் இறைக்கும் டீசல் இயந்திரமும், 5 குதிரை திறன் கொண்ட 2 நீர் இறைக்கும் டீசல் இயந்திரமும்,மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, மழை நீரை வெளியேற்றுவதற்காக, ஊழியர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர்  பாலசுப்பிரமணியன், மற்றும் மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top