Close
டிசம்பர் 5, 2024 2:24 காலை

திருச்சி மாநகராட்சி பகுதியில் மேலும் 6 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர்

24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கா குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் மேலும் 5 வாரங்களுக்கு 24 மணிநேரமும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் ரூ. 38.49 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.

பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் திருச்சி மாநகரின் தென்னூா், தில்லைநகா், மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், மரக்கடை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 16 வாா்டுகளில் 24 மணிநேரமும் குடிநீா் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மாநகரின் 65 வாட்டுகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி மேயர் கடந்த கூட்டத்தில் அறிவித்திருந்தார். இதைத் தொடா்ந்து, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ. 38.49 கோடியில் மேலும் 6 வாட்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சிப் பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியது வருமாறு:-

தமிழக அரசு அறிவிப்பின்படி, ஏற்கனவே மாநகரின் 16 வாண்டுகளில் 24 மணி நேர குடிநீா் வழங்கும் ஏதுவான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 51, 52, 53, 54, 55, 56 ஆகிய 6 வாா்டுகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ. 11.54 கோடியும், மாநில அரசின் நிதியுதவியாக ரூ. 10.39 கோடியும், டிஎன்யுடிஎப் கடனாக ரூ. 16.56 கோடியும் என மொத்தம் ரூ. 38.49 கோடியில் சென்னையைச் சேர்ந்த தனியாா் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் மூலம் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தை 5 ஆண்டுகள் செயல்படுத்தி, பராமரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 1.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மேற்கூறிய வார்டுகளில் 100.697 கி.மீ. நீளமுள்ள குழாய்களையும், 33 கி.மீ. நீளத்துக்கு பிரதான குழாய்களையும் பொருத்தி, ஏற்கனவே விநியோகிக்கப்படும் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுடன் கூடுதலாக நட்சத்திர நகரில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து, 77,749 பொதுமக்களுக்கு, ஒருவருக்கு நாள்தோறும் 135 லிட்டர்கள் வழங்கும் வகையில் 14,419 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட இருக்கிறது.

இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று, வரும் 2025-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top