Close
டிசம்பர் 12, 2024 8:54 மணி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்த அமைச்சர் வேலு

சாலைகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வேலு

திருவண்ணாமலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்படும் சாலைகளை அமைச்சர் எ.வ.வேலு, நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய தினங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது.
திருவண்ணாமலை நகரில் மாடவீதி, சின்னக்கடை வீதி, அண்ணா சிலை, திண்டிவனம் சாலை, மத்தளாங்குள தெரு உள்ளிட்ட அனைத்து சாலைகளும் சேதமடைந்தது.
கார்த்திகை தீபம் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் திருவண்ணாமலை நகருக்கு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும், அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கும் வருகை தருவார்கள்.
இதனால் சாலைகளை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் இரவு பகலாக சாலைகளில் தேங்கியுள்ள சேறு மற்றும் சகதிகள் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகளை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு, மாடவீதி, அண்ணா சிலை, மத்தளாங்குள தெரு ,சின்ன கடை வீதி, உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நடந்தே சென்று பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

250 டன் மணல் அகற்றம்
மேலும் மலை அடிவாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவு மற்றும் மண் மற்றும் மாட வீதிகளில் உள்ள மணல் என கிட்டத்தட்ட 250 டன் அளவிற்கு தற்போது வரை மணல் அகற்றப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், சட்டமன்ற உறுப்பினர் கிரி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top