திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியில் எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர் படிநிலையை எடுத்துள்ளது. உயர் தரமான எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை தமிழ் நாட்டில் முதன் முதலாக இன்று கமலா நிகேதன் பள்ளியில் தொடங்கப்பட்டது.
இந்த எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர்மு.மதிவாணன், கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளி நிர்வாக இயக்குநர் சத்தியமூர்த்தி, பள்ளியின் தாளாளர் கீதாஞ்சலி சத்தியமூர்த்தி, பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் மாலா சிவக்குமார் மற்றும் பெற்றோர்கள் மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பள்ளியின் அதிநவீன எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தின் முக்கிய அம்சங்கள்:
Advanced Robotics, Flight simulation, Aero modelling, VR & AR, How and Why நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக கமலா கல்வியாளர் எந்திரம் (Kamala Al Educator Robot) வெளியிடப்பட்டது. இது AI இயங்கும் கல்விக் கருவியாகும், இது பின்வருவனவற்றைக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
பன்மொழித் தொடர்பு (integrate multilingual communication), நிகழ் நேரப் பதில் (real time responsiveness), (object recognition), (robotic mobility) கல்வியாளர்களுக்கும் கற்பவர்களுக்கும் இணையற்ற ஆதரவாளராக செயல்படும் என்பதில் ஐயமில்லை.
இந்த நிகழ்வில் KN Future Hack 2024 ஒரு பள்ளி அளவிலான தேசிய Hackathon அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரண்டு முக்கிய கருப்பொருள்களான நிலைத்தன்மை
மற்றும் பசுமை தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கியம் (Sustainability & Green Tech)
ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி
மாணவர்களை ஒன்றிணைந்து செயல்படவும், புத்தாக்க ரீதியாக சிந்திக்கவும்,
தொழில்நுட்பத்தின் மூலம் உலகில் நன்னமை வழியில் தீர்வு காணவும் ஊக்குவிக்கிறது.
கமலா கல்வியாளர் எந்திரம் (Kamala Al Educator Robot) மற்றும் KN Future Hack
2024 தொடங்கப்பட்டதன் மூலம், கமலா நிகேதன் பள்ளியானது, புதுமையான கல்வியில்
முன்னணியில் உள்ள இடத்தை உறுதிப்படுத்துகிறது. வேகமாக வளர்ந்து வரும்
தொழில்நுட்ப உலகில் வெற்றிபெறத் தேவையான திறன் மற்றும் அறிவைக் கொண்டு மாணவர்களை மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.