Close
டிசம்பர் 12, 2024 1:58 மணி

கார்டினல் பொறுப்புக்கு கேரள பாதிரியார் தேர்வு..! பிரதமர் ஏற்பாட்டில் அரசு குழு வாடிகன் பயணம்..!

போப் பிரான்சிஸ் உடன் கார்டினலான கேரள பாதிரியார் மான்சிஞர் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டை

கேரள பாதிரியார் ஒருவர் மதிப்புமிக்க கார்டினலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் தலைமையில் ஒரு குழு வாடிகன் செல்வதற்கு பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார். இது கிறிஸ்தவ சமூக மக்களுக்கு முகப்பெரிய கெளரவம் ஆகும்.

உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க சமயத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. போப் தேர்வில் ஓட்டு போடும் தகுதியும் கார்டினல்களுக்கு உள்ளது.

பல்வேறு மறை மாவட்டங்களுக்கு தலைமையாக கார்டினல் செயல்படுவார். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கார்டினல்கள் தேர்வு செய்யப்படுவதுடன், போப் அவர்களை நியமனம் செய்து உத்தரவிடுவார்.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கார்டினல் பொறுப்புக்கு இந்தியாவில் இருந்து கேரள மாநிலம் செங்கனாச்சேரியை சேர்ந்த மான்சிக்னார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி நாளை (7ம் தேதி ) வாடிகனில் நடக்க உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பதற்கு இந்திய குழுவினர் செல்ல பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தலைமையில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குனில் சுரேஷ், ராஜ்யசபா எம்.பி. சதம்சிங் சாந்து, பாஜகவைச் சேர்ந்த அனில் ஆண்டனி, அனூப் ஆண்டனி, தாம் வடக்கன் ஆகியோர் வாடிகன் சென்றுள்ளனர்.

கார்டினல் பொறுப்பேற்பு நிகழ்வில் இந்திய அரசு சார்பில் ஒரு குழுவினர் பங்கேற்பது கிறிஸ்துவ சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை ஆகும். மேலும் இந்தியர்களை இது கௌரவப்படுத்தும் நிகழ்வாகும். இந்த ஏற்பாட்டை செய்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று வாடிகன் செல்லும் குழுவில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top