Close
டிசம்பர் 12, 2024 11:57 காலை

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி : ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார்..!

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு, கையெழுத்து இயக்கத்தை பேரணியை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்

நாமக்கல் :
நாமக்கல்லில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை, ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார்.

ஐ.நா. சபை 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த ஆண்டு உரிமைப் பாதையில் என்ற கருத்தினை மையமாக வைத்து, எச்ஐவி இல்லா சமூகம் உருவாக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், உலக எய்ஸ்ட்ஸ் தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார்,

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஜ்குமார் எம்.பி. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பேரணியில் கலந்துகொண்டு, மணிக்கூண்டு, டவுன் பஸ் ஸ்டாண்டு, திருச்சி ரோடு, டாக்டர் சங்கரன் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் எச்.ஐ.வி உள்ளோர்களை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் (ஏஆர்டி செனட்டர்கள்) உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் இல்லாத சமுதாயம் உருவாக சிறப்பான முறையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில்« மற்கொள்ளப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக 2023-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி பரவல் நிலை 0.2 சதவீதமாக குறைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,46,285 ஆண்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டதில் 330 நபர்களுக்கும், 1,11,294 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 269 பேருக்கும், 265 மூன்றாம் பாலினத்தவருக்கு பரிசோதனை செய்ததில் 4 நபர்களுக்கும், 73,851 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 24 கர்ப்பிணிகளுக்கும், எச்.ஐ.வி தெற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, திருச்செங்கோடு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச ஏ.ஆர்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த ஏ.ஆர்.டி சிகிச்சை மையங்களில் தற்போது வரை 7,501 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை எடுத்துவரும் நபர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்றவாறு 10 இணை ஏ.ஆர்.டி சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000- உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top