Close
டிசம்பர் 12, 2024 2:41 மணி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர 23வது வார்டு குழுகூட்டம்

திருச்சி மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது வார்டு குழு கூட்டம் நடந்தது.

திருச்சி மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது வார்டு  குழு  கூட்டம் சக்திவேல் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் அரசியல் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் வார்டு செயலாளர் முருகன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் புஷ்பம், மீனாட்சி சுந்தரம், ராஜேஸ்வரி, புவனா, மணிமேகலை, ஏழுமலை உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டிசம்பர் 26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு துவக்க விழா மற்றும் வாழும் மனிதர் நல்லக் கண்ணுவின் நூற்றாண்டு பிறந்த தின விழா, கே. டி. கே தங்கமணியின்நி நினைவு நாளினை 23 வது வார்டு பகுதியில் மிகவும் சிறப்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மிகவும் சிறப்பாக நடத்துவது.

23 வது வார்டு பகுதியில் இயங்கி வரும் ஊர் புற நூலகத்தை கிளை நூலாகமாக மாற்றுவதோடு டிஜிட்டல் லைப்ரரியாக மாற்றுவதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
*குறத்தெரு என்கிற சாதிப் பெயரில் உள்ள பேருந்து நிறுத்தத்தை வாழும் மனிதர் சுதந்திரப் போராட்டவீரர் ஆர். நல்லகண்ணு  அவர்களின் பெயரால் ஆர். என் .கே நகர் பேருந்து நிறுத்தம்என்கிற பெயர் மாற்றம் செய்வதோடு பேருந்து நிழற்குடையும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top