பஞ்சாப்-ஹரியானா எல்லையில் (சம்பு எல்லை) விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி செல்ல முயன்றுள்ளனர். டெல்லி சலோ என்று பெயரிடப்பட்ட இந்த இயக்கத்தை தடுக்க, போலீசார் சாலைகளில் முள்வேலி மற்றும் அனைத்து வகையான தடுப்புகளையும் அமைத்துள்ளனர்.
இந்த மின்கம்பிகள் மற்றும் சாலையில் உள்ள இடையூறுகளை அகற்றி விவசாயிகள் பயணத்தை தொடர்ந்தனர். இதனிடையே, போலீஸார் அமைத்திருந்த தடுப்பு வேலியில் ஏறி விவசாயிகள் அகற்ற முயன்றனர். இதற்கு பதிலடியாக போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டத்தின் (பிஎன்எஸ்) பிரிவு 163-ன் கீழ் விவசாயிகளுக்கு எதிராக தடை உத்தரவு விதித்ததை ஹரியானா காவல்துறை மேற்கோள் காட்டியுள்ளது. சம்பு எல்லையில் உள்ள விவசாயி தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில் “நாங்கள் டெல்லியை நோக்கி அமைதியாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது எங்கள் கோரிக்கைகள் குறித்து எங்களிடம் பேச வேண்டும். அம்பாலாவில் இணைய சேவையை மீட்டெடுக்க வேண்டும். விவசாயிகள் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன என தெரிவித்தார்
டெல்லி எல்லையில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் போராட்டங்களின் போது விவசாயிகள் எழுப்பிய முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி விமர்சித்தார். விவசாயிகள் மத்தியில் நிலவும் அதிருப்தி பற்றி பேசிய திவாரி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசியலமைப்பு உத்தரவாதத்தை வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியை எடுத்துக்காட்டினார், இது “வாக்குறுதி மீறல்” என்று கூறினார்