சோழவந்தான்:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மன்னாடிமங்கலம் கிராம ஊராட்சியில், பிரதம மந்திரி திட்ட ஊரக மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2023. 24 நிதி ஆண்டிற்கான சமூக தணிக்கை நடைபெற்றது.
தமிழ்நாடு சமூக தணிக்கை வாடிப்பட்டி வட்டார வள அலுவலர் நாகராஜன் மற்றும்
கிராம வள அலுவலர்கள் சமூக தணிக்கை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பவன் மற்றும் ஊராட்சி செயலாளர் திருச் செந்தில் பணி மேற்பார்வையாளர் கருப்பையா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.