நாமக்கல் :
முத்துகாபட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் அருகே உள்ள முத்துக்காப்பட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி, மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதருக்கு பால், பன்னீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார்கள்.
உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த பூஜையில் நாமக்கல், முத்துக்காப்பட்டி, சேந்தமங்கலம், செல்லப்பா காலனி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம், முத்துகாப்பட்டி கிளைச்சங்கம், மகளிர், இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.