Close
டிசம்பர் 12, 2024 4:43 மணி

காந்தி, நேரு பிறந்தாளை முன்னிட்டு 17ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி..!

பேச்சுப்போட்டி -கோப்பு படம்

நாமக்கல் :

காந்தி, நேரு பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 17ம் தேதி நாமக்கல்லில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.

இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் போட்டிகள் நடைபெறும். அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம்.

காலை 9.30 முதல் 1 மணி வரை, காந்தியடிகள் தலைப்பிலும், மாலை 2 முதல் 5.30 மணி வரை ஜவாஹர்லால் நேரு சம்மந்தமான தலைப்பிலும் போட்டிகள் நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, 2ம் பரிசு ரூ. 3,000, 3ம் பரிசு ரூ. 2,000 வீதம் வழங்கப்படும்.

விடுதலை இந்தியாவின் வித்தகர், அயலகத்தில் அண்ணல் காந்தி, நாடு போற்றும் நற்சிந்தனையாளர் காந்தியடிகள், பண்டிதர் நேருவின் கடிதங்கள், ஜவாஹர்லால் நேருவின் அரசியல் கொள்கைகள், டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற தலைப்புகளில் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாக இந்த பேச்சுப்போட்டிகளில் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04286- 292164 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top