– ஷம்பு எல்லையில் விவசாயிகளை ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, மற்றும் விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் டில்லி முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்
டில்லிக்குள் நுழையாமல் இருக்க பஞ்சாப், ஹரியானா டில்லி எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பு எல்லையில் போலீசார் அமைத்த தடுப்புகளை உடைத்து முன்னேற சிலர் முயற்சித்தனர். ஆனால் போலீசார் கண்ணீர் புகை வீசி விரட்டினர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
மோதலின் போது சுமார் ஒன்பது விவசாயிகள் காயமடைந்ததாகக் கூறினர், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர தேவையான அனுமதியை வழங்குமாறு ஹரியானா போலீசார் கேட்டுக் கொண்டனர்.
விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியதாவது: ஒரு விவசாயி பி.ஜி.ஐ.யில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார், மேலும் 8-9 விவசாயிகள் காயமடைந்ததால், ‘பேரணியை வாபஸ் பெற்றோம். கூட்டம் முடிந்ததும், எதிர்காலத் திட்டத்தைப் பற்றி நாங்கள் முடிவெடுப்போம் என்று கூறினார்