Close
டிசம்பர் 12, 2024 6:28 மணி

திருச்சியில் காங்கிரசார் கொண்டாடிய சோனியா காந்தி பிறந்த நாள் விழா

திருச்சியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டுதல் குழு தலைவராக இருந்தவருமான சோனியா காந்தி பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி கேக் வெட்டி அன்னதானமிட்டு விழா நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி,மாவட்ட பொருளாளர் முரளி, மாவட்ட துணை தலைவர் கேடி பொன்னன்,கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல், அழகர், மலர் வெங்கடேஷ், இஸ்மாயில், கிருஷ்ணன், பிரியங்கா பட்டேல், எட்வின் ராஜ், மணிவேல், பாக்யராஜ் அணி தலைவர்கள் ஐ டி பிரிவு விஜய் பட்டேல்,கிளமென்ட்,வீரமணி,மனித உரிமை துறை எஸ் ஆர் ஆறுமுகம், மாணவர் காங்கிரஸ் நரேன், கலைபிரிவு ராஜவேந்திரன்,டிசிடியூ கலிய மூர்த்தி, மகிளா காங்கிரஸ் சீலாசெலஸ்,அஞ்சு, பொறியாளர் அணி ஹரிஹரன், விவசாய பிரிவு அண்ணாதுரை, எஸ்சி பிரிவு கலிய மூர்த்தி,என்ஜிஓ பிரிவு கண்ணன்,விமல்,மாரியம்மாள்,விச்சு,விஜய் பக்தன், ஜாபர், எழிலரசன், முகமதுபட்டேல்,ராஜா, அண்ணாதுரை மலைக்கோட்டை சேகர், செந்தமிழ் செல்வன், நிஷா, இந்திரா காந்தி, அலமேலு, பிரியா, கோகிலா, முஸ்தபா, ஹீரா, ஜெய்கணேஷ், ஹரி,பிரசாத், குமார், பாலு, மனோகரன், சுதர்ஷினி, அண்ணாதுரை, ஹரி பிரசாத், ஆகாஷ்,முகமது ஆரிப், ரபிக் ,சரவணன், அப்துல் மஜீத், ராம்பிரகாஷ், ஹரிவாஸ், ராஜேந்திரன், மஜீத் ,பாதுஷா, லட்சுமி அம்மாள், கிஷோர், குமார் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top