Close
டிசம்பர் 12, 2024 12:37 மணி

டங்ஸ்டன் சுரங்கம் வராது : பாஜக உறுதி..!

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்ட அரிட்டாபட்டி பகுதி

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மோடி அரசு தமிழக மக்களின், விவசாயிகளின் நலம் காக்கும் அரசு. தமிழ்நாடும் தமிழக மக்களும் விரும்பும் திட்டங்களை தான் மத்திய மோடி அரசு தமிழகத்தில் செயல்படுத்தும்.

பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காக திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தெளிவுபடுத்தி உள்ளார்.

விரைவில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும். நல்ல செய்தி வரும் என்பதை தமிழக பாஜகவின் சட்டசபை தலைவர் நைனார் நாகேந்திரன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காக திட்டங்கள் மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு திட்டங்கள் தீட்டப்பட்டாலும், அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது, அந்தந்த கிராம நல சபை, மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், மிக முக்கியமாக விவசாய நல சங்கங்கள் மற்றும் மாநிலங்களை ஆளுகின்ற அரசின் கருத்துக்களை கேட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மட்டுமே மத்திய மோடி அரசு இறுதியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சட்டசபை விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் நில உரிமைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த சட்டம் மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல் ஆகிறது. சுரங்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று கனிம வளங்கள் மாநில பட்டியலில் இல்லை என்று மத்திய அரசு குறித்து நேற்று சட்டசபையில் கடுமையாக பேசியிருந்தார்.

காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்த போது கனிம வளங்களை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு தாரை பார்த்து பல லட்சம் கோடி கொள்ளை அடிக்கபட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலுக்கு வித்திட்டது போல் ஐக்கிய முற்போக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கனிம சுரங்க உரிமைகளை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கே வழங்கினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய தாரக மந்திரத்துடன் நம் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனைகளை உணர்ந்து, மக்கள் நல அரசியலைப் புரிந்து அவருடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். தேர்தல் அரசியலுக்காக மோடி அரசு குறித்து தமிழக மக்களிடையே தவறான கருத்துகளை உருவாக்கக்கூடாது.

பிரதமர் நரேந்திர மோடி ஆண்ட கட்சிகளையும் தற்போது ஆளுகின்ற கட்சிகளையும் விட தமிழக மக்களின் மேல் அக்கறை கொண்டவர் நாட்டின் வளர்ச்சிக்காக கனிம வளம், அனு விஞ்ஞானம், தொழில்துறை உள்ளிட்ட பிற துறைகளின் சார்பாக மத்திய அரசு திட்டம் தீட்டினாலும் விவசாய மக்களின் வேண்டுகோள்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, அவர்களுடைய நலன்களை பேணி பாதுகாக்கும் வகையில் உடனடியாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில், குறிப்பாக, சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி பகுதிகளில், நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

டெல்டா மாவட்டங்களின் விவசாய சங்க பிரதிநிதிகள், பாரத பிரதமருக்கு இந்த சுரங்க ஏல அனுமதியை கைவிட வேண்டும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாயிலாக கோரிக்கை விடுத்தனர்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உடனடியாக பிரதமருக்கு இது குறித்து கடிதம் எழுதினார். பெங்களூரு சென்று, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து இத்திட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டாட்சி தத்துவத்தின் மாண்புக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளையும் நலன்களையும் கவனத்தில் கொண்டு, இந்த மூன்று சுரங்கங்களையும், ஏல நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று உடனடியாக அறிவித்தார்.

மேலும் தென்காசி மாவட்ட ம் திருவேங்கடம் தாலுகா, குறிஞ்சாங்குளம்  கிராமத்தில் கிராபைட் உள்ளிட்ட தாது மணல் வெட்டி எடுக்க ரூ45,000 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக மின் ஏலமும் விட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அப்பகுதி மக்கள் பாரத பிரதமருக்கு இந்த திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியை சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகள் உட்பட, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

தமிழக பாஜக குறிஞ்சான் குளம் கிராம மக்களின் எண்ணங்களை மத்திய அரசுக்கு உரிய முறையில் தெரிவித்து, அவர்களின் நலம் காக்கும் வகையில் தகுந்த முன்னெடுப்பை எடுத்ததன் காரணமாக அந்த திட்டம் உடனடியாக கைவிடப்படுவதாக மத்திய மோடி அரசு அறிவித்தது. இதையெல்லாம் வசதியாக மறந்து மறைத்து சட்டசபையில் புதிதாக உருவான திமுக அண்ணா திமுக திராவிட மாடல் கூட்டணி மத்திய அரசு தவறு செய்தது போல் நாடகம் ஆடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

எனவே தமிழக மக்களின் தமிழக விவசாயிகள் வேண்டுகோளை பிரதமர் மோடி தாயுள்ளத்துடன் நிறைவேற்றுவார். எனவே டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்பதை திட்டவட்டத்துடன் தமிழக பாஜக தெரிவித்துக் கொள்கிறது.

எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு ஆற்றி வரும் நல்ல திட்டங்களை தமிழகத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க அளித்துள்ள லட்சக்கணக்கான கோடி நிதியை, அக்கறையான செயல்பாடுகளை எல்லாம் இருட்டடிப்பு செய்யும் வகையில், மக்களிடையே பாஜக கட்சி மற்றும் ஆட்சி குறித்து அவதூறு பிரசாரம் செய்யும் திமுகவினரை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

அறிக்கை: ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top