Close
டிசம்பர் 12, 2024 7:39 காலை

புதுக்கோட்டை அருகே குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மாறுவேடப்போட்டி

புதுக்கோட்டை அருகே உள்ள குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளி மாறுவேடப்போட்டி ஓ எஸ் பி திருமண மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது. மகாத்மாபள்ளியின் தாளாளர் டி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆலோசகர் நீலாவதி ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்
குட்டீஸ்கள் மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். சிவன்பெருமான் விநாயகர் முருகப்பெருமான்,ராதை கண்ணன், சரஸ்வதி, மகாலட்சுமி, கருப்பசாமி, பாரதமாதா, தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி, திருவள்ளுவர், காமராஜ், நேரு, பாரதியார், நேதாஜி மற்றும் கலெக்டர், எஸ் பி, மருத்துவர், செவிலியர், காவல்துறை அதிகாரி, ராணுவ வீரர், ஆசிரியை, விவசாயி, விண்வெளி, பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சள் பை விழிப்புணர்வு, நியூஸ் பேப்பர் விழிப்புணர்வு ,மரம் , ராக்கெட் போன்ற எண்ணற்ற வேடமணிந்து மேடையில் வலம் வந்து மேலும், தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்


இதில் நடுவர்களாக கவிஞர்கள் தனிக்கொடி, பீர்முகமது, கவின்பாரதி, நபிதாபானு, இந்துமதி ஆசிரியைகள் சுபாஷினி, திவ்யபாரதி ஆகியோர் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் வழங்கினர்கள்
பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆசிரியைகள், மாணவ , மாணவிகள்.,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் டி.ரவிச்சந்திரன் ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top