Close
டிசம்பர் 12, 2024 8:35 மணி

விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

நேரு யுவகேந்திரா போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை!

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட அளவில் நடத்திய இளையோர் திருவிழாவில் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவரர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனர. பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவி .தீபஸ்ரீ கவிதைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் ரூபாய் 2500 ரொக்கப்பரிசும்,   பதினோறாம் வகுப்பு மாணவன் பிரிதிவி ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் மற்றும் ரூபாய் 1500 ரொக்கப்பரிசும்; பெற்றுள்ளனர் .

நேரு யுவகேந்திரா போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று பள்ளிக்குச் சிறப்புச் செய்த மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர்  தங்கம் மூர்த்தி  மற்றும் பள்ளியின் இயக்குநர் சுதர்சன் ஆகியோர்  நினைவுப் பரிவுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

பள்ளிக்கல்வித்துறை நடத்திய டேக்வாண்டோ போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிபெற்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர சாதனை!

புதுக்கோட்டை திருக்கோகர் ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்  பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார்  தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.

இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன கமலேஷ்டேக்வாண்டோ போட்டியில் 35 -38 கிலோ பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார் . மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டிகளில் சாதனை புரிந்து பள்ளிக்குப் பெருமை சேர் த்த மாணவனுக்கு பள்ளியின் இயக்குநர் சுதர்சன் மற்றும் துணைமுதல்வர்  குமாரவேல் ஆகியோர்  நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர் . உடன் கராத்தே மாஸ்டர்  சேது கார்த்திகேயன் உள்ளார் .

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று சாதனை

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார் .

சமீபத்தில் தமிழ்நாடு மாநில அக்வேட்டிக் அசோசியேசன் மாநில அளவிலான 18வது நீச்சல் சேம்பியன்ஷிப்; போட்டியை மதுரையில் நடத்தியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர் .

அதில் வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி தேவிகா 100மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக்ரூபவ் பெண்களுக்கான குரூப்-4 பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார் .

நீச்சல் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்ற ஐந்தாம் வகுப்பு மாணவி தேவிகாவை பள்ளியின் முதல்வர்  கவிஞர்  தங்கம் மூர்த்தி பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார் . பள்ளியின் இயக்குனர் சுதர்சன் ரூபவ் துணைமுதல்வர்  குமாரவேல் ஆகியோர்  வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top