Close
டிசம்பர் 15, 2024 10:01 காலை

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 5வது வார ஞாயிறு மண்டை விளக்கு பூஜை..!

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை 5வது வாரத்தையொட்டி மண்டை விளக்கு பூஜை செய்வதற்கு கூடிய பக்தர்கள்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் 5 வது வார ஞாயிற்றுக்கிழமையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர்.

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பரிகார தலங்கள் அமைந்துள்ளது. இதுபோன்ற பரிகார தலங்களுக்கு பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டு இறையருள் பெற்று சென்று வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கட்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் மண்டை விளக்கு பூஜை என கூறப்படும் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர மா விளக்கு போட்டு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் மேற்கொண்டு இறையருள் பெற்றனர்.

இப்பூஜையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மண்சட்டியால் ஆன பாத்திரத்தில் அரிசி மாவு கொண்டு மாவிளக்கு செய்து அதில் நெய் விளக்கு ஏற்றி திருக்கோயிலை வலம் வந்து மூலவர் கச்சபேஸ்வரரை நோய்கள் தீர வேண்டி வணங்கி சென்றனர்.

இன்று ஐந்தாவது கடைசி வார ஞாயிற்றுக்கிழமையும் முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 7 மணி முதலே தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்கும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை கூறிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் வரும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top