Close
டிசம்பர் 19, 2024 3:17 மணி

காங்கிரஸ் ராகுல் தள்ளியதில் பாஜக எம்பிக்கு தலையில் காயம்..!?

காயமடைந்துள்ள பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத். காங்கிரஸ் எம்.பி ராகுல்

பாஜக எம்பியை தள்ளிவிட்டதற்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பார்லி. வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் எம்பிக்களுடன் ஏற்பட்ட மோதலில் பாஜகவைச் சேர்ந்த ஒடிசா எம்பி சாரங்கி மண்டை உடைந்தது. இன்னொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு டில்லி ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறும்போது,

ராகுல் தள்ளிவிட்டதில் பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத் காயம் அடைந்து உள்ளார். அவருக்கு சிறிது ரத்தம் கசிந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாஜக எம்பியை தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் தனது வலிமையை காட்ட, பாஜக எம்பிக்களை தள்ளிவிட்டது சரியல்ல. காங்கிரஸ் எம்பி ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் ராகுலிடம் கேட்க விரும்புவது , வன்முறையில் ஈடுபட ராகுலுக்கு அதிகாரம் வழங்கியது யார்? எம்பிக்கள் மீது ராகுலின் உடல்ரீதியான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இது ராகுலின் கோபம், விரக்தியைக் காட்டுகிறது. ராகுலுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம் என்று ராகுலிடம் கூற விரும்புகிறேன். நாங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதால் மட்டும் உடல் ரீதியாக யாரையும் பழிவாங்கவில்லை.

நாங்கள் எங்கள் உடல் வலிமையை மற்ற எம்பிக்களுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம். ஏனென்றால் நாங்கள் அதை நம்பவில்லை. நாங்கள் அகிம்சையை நம்புகிறோம். நாங்கள் அகிம்சையில் நம்பிக்கை வைப்பதாலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைப்பதாலும் வன்முறையில் ஈடுபடுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ராகுல் மீது போலீசில் புகார் அளிக்க பாஜகவினர் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top