Close
டிசம்பர் 23, 2024 9:12 காலை

திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 6-ஆவது கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட திட்டக் குழுவின் துணைத் தலைவருமான பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா். திட்ட அலுவலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தில், மாநிலத் திட்டக்குழு அலுவல் சாரா துணைத் தலைவராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து, நிவாரணம் வழங்கிய முதல்வா் ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தந்தை பெரியாரின் கேரள மாநிலம் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பெரியார் நினைவகத்தினை தமிழ்நாடு அரசின் நிதி மூலமாக கம்பீரமான தோற்றத்துடன் கூடிய சிலை நினைவகம் நூலகம்  முதலியவை இணைந்த அறிவு கருவூலமாக புதுப்பித்தமைக்கு முதலமைச்சருக்கும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிற்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியன்ஷிப் சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் அவர்களுக்கு அரசின் சார்பில் ரூபாய் 5 கோடி ரொக்க பரிசு வழங்கியமைக்கு முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்ட திட்ட குழு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் ஆறுமுகம், ஞான சௌந்தரி , இல.சரவணன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இயக்குனர் கண்ணகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பக்தவச்சலம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரகாஷ் , மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியம், மாவட்ட திட்டப்பிரிவு அலுவலக புள்ளியல் அலுவலா் புருஷோத்தமன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top