Close
டிசம்பர் 22, 2024 10:22 மணி

கடவுள் தேசம் கேரளா என்றால் தமிழகம் என்ன கண்றாவி தேசமா..? சீமான் கொந்தளிப்பு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் -கோப்பு படம்

‘கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா? கழிவுகள் ஆபத்தானவை இல்லையென்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே?’ என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறும்போது,

சோதனைச் சாவடியைத் தாண்டி கழிவுகள் எவ்வாறு வருகிறது? கேரளாவின் மருத்துவக் கழிவுகள் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. என்னுடைய வளங்களை வெட்டி எடுத்து சென்று அவர்களின் குப்பைகளை இங்கே கொட்டுகின்றனர். கேரளா கடவுளின் தேசம் என்றால், தமிழகம் என்ன கண்றாவி தேசமா? கழிவுகள் ஆபத்தானவை இல்லையென்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே? இதை கேட்டு தடுத்திருக்க வேண்டியது யார்?

தமிழகத்தில் கழிப்பிடம், குடியிருக்கும் இடத்தை தவிர மீதமுள்ள அனைத்துக்கும் கருணாநிதி பெயர் தான் வைக்கப்பட்டு பாஜகவுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

என்னை எதிர்ப்பவர் எல்லாம் எதிரி அல்ல

திமுக தான் பாஜகவின் ஏ டீம் என்பதால் என்னை பி டீம் என்கிறார்கள். அ.திமு.கவைக் கண்டு கூட திமுக பயப்படுவதில்லை. என்னைப் பார்த்து தான் பயப்படுகிறது. இதுவரை இருந்ததிலேயே மிக மோசமான முதல்வர் ஸ்டாலின் தான். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். பணம் கொடுத்தால் தான் திமுகவினர் வேலை செய்வார்கள். என்னை எதிர்க்கும் அனைவரும் எனது எதிரிகள் அல்ல.

திமுக சாதனைகளை போர்ப்பரணி பாட வேண்டும் என செயற்குழுவில் கூறியுள்ளனர் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு,

‘ தி.மு.க., பாடவிருக்கும் போர்ப் பரணியை கேட்க ஆவலாக இருக்கிறேன். சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்னை உள்ள நிலையில் அவர்கள் போர்ப்பரணியை கேட்க ஆவலாக இருக்கிறேன்’ என்று சீமான் பதில் அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top