Close
டிசம்பர் 23, 2024 3:42 காலை

பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது

குவைத் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் ‘ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். குவைத் சிட்டியில் நடந்த ‘ஹாலா மோடி’ என்ற குவைத் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.
இதனையடுத்து குவைத் அரண்மணையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் விவாதித்தார்.
இந்நிலையில், குவைத் நாட்டின் உயரிய விருதான ‘ ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருது வழங்கி அந்நாடு கவுரவித்தது.
நட்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர், இந்த விருதானது அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடி இதுவரை பெற்ற உயரிய விருதுகள்

2016 ல் சவுதி அரேபியாவின் ‘ ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்’ விருது
2016 ல் ஆப்கனின் ‘ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்’ விருது
2018 ல் பாலஸ்தீனத்தின் ‘ கிராண்ட் காலர்’ விருது
2019 ல் ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ஆர்டர் ஆப் ஜாயீத்’
2019 ல் ரஷ்யாவின் ‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருது
2019 ல் மாலத்தீவின் ‘ஆர்டர் ஆப் தி டிஸ்டின்குயிஷ்ட் ரூல் ஆப் நிசான் இசுதீன்’ விருது
2019ல் பஹ்ரைனின் ‘அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான’ விருது
2020ல் அமெரிக்காவின் ‘லிஜியன் ஆப் மெரிட்’ என்ற விருது
2023 ல் பலாவு குடியரசின் ‘எபகல்’ விருது
2023 ல் பிஜி நாட்டின் ‘கம்பேனியன் ஆப் ஆர்டர் ஆப் பிஜி’ விருது
2023ல் பப்புவா நியூ கினியாவின் ‘கிராண்ட் கம்பானியன் ஆப் லோகோஹு’ விருது
2023ல் எகிப்தின் ‘ஆர்டர் ஆப் நைல் ‘
2023ல் பிரான்சின் ‘லிஜியன் ஆப் ஹானர்’ விருது
2023 ல் கிரீசின் ‘ ஆர்டர் ஆப் ஹானர்’ விருது
2024 ல் பூடானின் ‘ஆர்டர் ஆப் தி டிராகன் கிங்’
2024 ல் நைஜீரியாவின் ‘கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் நைஜர்’ விருது
2024 டொமினிகாவின் ‘ஹானர் ஆப் டொமினிகா ‘ விருது
2024 ல் கயானாவின் ‘ ஆர்டர் ஆப் எக்சலன்ஸ் ‘ விருது.
2024 ல் பார்படாசின் ‘ ஹானோரரி ஆர்டர் ஆப் ப்ரீடம் ஆப் பார்படாஸ்’ விருது
2024ல் குவைத்தின் ‘ஆர்டர் ஆப் முபாரக்’

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top