Close
டிசம்பர் 25, 2024 11:47 காலை

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தேசிய விவசாயிகள் தின விழா..!

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய விவசாயிகள் தின விழாவில், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சுந்தரம் பேசினார்.

நாமக்கல் :

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தேசிய விவசாயிகள் தின விழா நடைபெற்றது.

நாமக்கல்லில் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் தேசிய விவசாயிகள் தின விழா மற்றும் முன்னாள் பாரத பிரதமர் சரண்சிங் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நூலக வாசகர் வட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தின் மாவட்ட தலைவர் வாசு சீனிவாசன், பாரதிய கிசான் சங்க நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் செல்வம் வரவேற்றார்.

முன்னாள் பாரத பிரதமர் சரண் சிங் படத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட பொருளாளர் சிவகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எருமப்பட்டி வட்டார தோட்டக்கலைத்துறை துணை அலுவலர் ராஜவேல் விவசாயத்தில் புதுமை என்ற தலைப்பிலும், இயற்கை விவசாயி பாலப்பட்டி வேலுசாமி நஞ்சில்லா விவசாயம் என்ற தலைப்பிலும், நாமக்கல் அடின் நர்சரி சுரேந்தர் வீட்டுத் தோட்டம் அமைப்பது எளிது என்ற தலைப்பிலும், யமுனா ஆனந்த் மரபு விதைகளின் பயன்கள் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் அத்திப்பழ விவசாயி சின்னுசாமிக்கு விவசாயிகளின் விடிவெள்ளி சரன் சிங் விருதும், ஒருங்கிணைந்த பண்ணை விவசாயி திருச்செங்கோடு பன்னீர் செல்வத்திற்கு விவசாயிகளின் தோழர் சீனிவாச ராவ் விருதும், பந்தல் காய்கறி விவசாயி பழையபாளையம் சங்கருக்கு விவசாய போராளி நாராயணசாமி நாயுடு விருதும்,

இயற்கை விவசாயி பரமத்தி வேலூர் லோகநாதனுக்கு இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சுந்தரம் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பேசினார்.

விழாவில் நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் அமல்ராஜ், ஆன்மிக கூட்டமைப்பு தலைவர் சர்வாணந்தா, ரயில் பயணிகள் சங்க தலைவர் சுப்பிரமணி, ஆசிரியர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக துரைராஜ் குழுவினரில் மங்கள இசை நடைபெற்றது. முடிவில் நூலக வாசகர் வட்டப் பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top