ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சிராணியையே இன்று வரை சொல்லியும் எழுதியும் வருகிறார்கள்.
இந்திய சுதந்திர வரலாறுகளை பெரும்பாலும் வடநாட்டுக்காரர்களே எழுதி வந்ததால், அவர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை முதன் முதலில் எதிர்த்த பெண்மணியாக ஜான்சிராணியையே குறிப்பிட்டு வருகிறார்கள்.
எதை கணக்கிட்டு, எதை வைத்து அப்படி சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. 1857- சிப்பாய் கலகம்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட முதல் குரல் என்கிறார்கள். இதைதான் நாம் படிக்கிறோம்.
இந்த தவறுகளை எப்போது திருத்தப் போகிறார்களோ? இந்தியாவின் முதல் சுதந்திரக் பூலித்தேவனின் குரலே. இவருக்கு பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்த கம்பீரக்குரல் வீரமங்கை வேலு நாச்சியாரின் குரலே!
ஜான்சிராணி பிறந்தது 1830. இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் வேலுநாச்சியார். ஆம், இவர் பிறந்த வருடம் 1730.
இதன் மூலம் ஜான்சிராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார் அவர்களே என்பது புரிகிறதல்லவா!
சுதந்திரப் போராட்டம் என்பதே வடக்கிலிருந்து தொடங்கியதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதால் தென்னாட்டவர்களின் போராட்டங்கள் தெரியாமல் போய் விட்டது.
இந்திய வரலாற்றிலேயே கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல், தன் கணவனை கொன்றவனை கொல்லாமல் சாகமாட்டேன் என்று சவால் விட்டு வாழ்ந்த வீரப்பெண். சிவகங்கைப் போரில் இவர் காட்டிய வீரத்தை கும்பினி படை தளபதிகள் வியந்து பல நூல்களில் எழுதியுள்ளனர்.
இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஆங்கிலேயர்க்கு எதிராக முதல் முதலாக போர் தொடுத்து வெற்றிப் பெற்ற முதல் பெண்மணி வீரர்.
இந்திய பெண்களின் வழிகாட்டியாய் திகழும் வேலுநாச்சியாரை என்றென்றும் தொழ வேண்டும். நாட்டு பற்றுள்ளவராய் மாற வேண்டும். இதுதான் நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋