Close
ஜனவரி 5, 2025 1:19 மணி

100 கிமீ, 12 நாட்கள் நீடித்த உலகின் மிக நீண்ட டிராபிக் ஜாம்! கேட்டாலே தலையை சுத்துதே!

டில்லியில் உள்ள மக்கள் தங்கள் அலுவலகத்தை அடைய, 20-25 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக்கொள்கிறார்கள். பெங்களூரு போன்ற நகரங்களில் மக்கள் தங்கள் வாழ்நாளில் பாதியை போக்குவரத்து நெரிசலில் கழிக்கின்றனர். நீங்கள் ரயில் அல்லது விமானத்தைப் பிடிக்க விரும்பினால், அதற்கு வெகுநேரத்திற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்ப வேண்டும். நீங்கள் எப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளலாம் என்று உங்களுக்குத் தெரியாது.

ஒருமுறை நீங்கள் ஒரு நெரிசலில் சிக்கிக்கொண்டால்,அதுவும்   வெறும் ஒரு மணி நேர போக்குவரத்து நெரிசல் போதும் அது ஒரு சோதனையைத் தவிர வேறில்லை..

ஒரு சிறிய டிராபிக் ஜாம் நம்மை டென்ஷன் ஆக்குகிறது,  ஆனால் 12 நாட்கள் நீடித்த உலகின் மிக நீளமான போக்குவரத்து நெரிசலின் கதையை பற்றி உங்களுக்கு தெரியுமா? .

12 நாட்களாக வாகனங்கள் கூட செல்லாமல் மக்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். அந்த வரலாற்று நெரிசலில் சிக்கியவர்களின் நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

இந்த சம்பவம் ஆக. 14, 2010 அன்று சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்ஜிங்-திபெத் எக்ஸ்பிரஸ்வேயில் (சீனா தேசிய நெடுஞ்சாலை 110) நடந்தது. 100 கி.மீ., வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 12 நாட்களாக வாகனங்களும், காரில் அமர்ந்திருந்தவர்களும் சாலையில் சிக்கி தவித்தனர். இந்த டிராபிக் ஜாம் இதுவரை உலக வரலாற்றில் மிக நீளமான ஜாம் ஆகும். பார்க்கும் தூரம் வரை வாகனங்கள் மட்டுமே தெரிந்தன.

நெரிசல் நீண்டதாக இருந்ததால், மக்கள் அங்கேயே சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கினர்.

பெய்ஜிங்-திபெத் விரைவுச் சாலைக் கட்டுமான பணிக்காக மங்கோலியாவிலிருந்து பெய்ஜிங்கிற்கு நிலக்கரி மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகளால் நெரிசல் ஏற்பட்டது. விரைவுச் சாலையில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக போக்குவரத்து ஒருவழியாக மாற்றப்பட்டது.

மங்கோலியாவிலிருந்து பெய்ஜிங்கிற்கு கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் டிராபிக் ஜாமை ஏற்படுத்தியது. , அதை அகற்ற நிர்வாகத்திற்கு 12 நாட்கள் ஆனது.

டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்காலிக வீடுகள் கட்டப்பட்டு சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், நூடுல்ஸ் மற்றும் இதர உணவுப் பொருட்கள் நான்கு மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. 10 மடங்கு அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

நெரிசலை சரிசெய்ய  நிர்வாகம் இந்த பாதையில் போக்குவரத்தை நிறுத்தியது. நெரிசலில் சிக்கிய லாரிகள் முதலில் விடப்பட்டன. அங்கு சிக்கியவர்களை மீட்க நிர்வாகம் இரவு பகலாக உழைத்தது. இறுதியாக, உலகின் மிக நீளமான நெரிசல் ஆகஸ்ட் 26, 2010 அன்று முடிவுக்கு வந்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top