மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி, அம்மாநாட்டுக்கான கொடிப் பயணம் புதன்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற கொடிப் பயண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே. பாலபாரதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் மா.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலர் எஸ்.சங்கர், மூத்த தலைவர் பெரி.குமாரவேல் ஆகியோர் பேசினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் டி.காயத்திரி வரவேற்றார். முடிவில், எம்.ஏ.ரகுமான் நன்றி கூறினார்.