மதுரை வக்பு வாரியக் கல்லூரியில், விலங்கியல் துறை சார்பாக மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (ஜன.06) விலங்கியல் ஆய்வகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஷாசுலி இப்ராஹிம் தலைமை தாங்கினார். நிகழ்வை விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ரேஷ்மா பானு தொகுத்து வழங்கினார்.
விலங்கியல் துறைத் தலைவரும் இணை பேராசிரியருமான முனைவர் மும்தாஜ் பாராட்டி தொடங்கி வைத்தார்.
இதில், விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி அனிஷா அஃப்ரின் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் விருதுநகர் (தன்னாட்சி) கல்லூரியின் விலங்கியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் நூர்தீன், கொசுக்கடிக்கான இயற்கையான தீர்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இக்கருத்தரங்கில் அவர் கொசுக்கள் எவ்வாறு உற்பத்தியாகின்றன என்பது குறித்தும் கொசுக்களினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலும், அவர் கொசுக்களின் வகைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் கொசுக்கடியிலிருந்து மனிதர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்தும் கொசுக்கடிகளுக்கு உண்டான இயற்க்கையான தீர்வு என்ன என்பது, போன்றவைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
மேலும் முனைவர். அப்துல் காதர் மொஹிதீன், முனைவர் ராஜபிரியா, முனைவர் துரைக்கண்ணு மற்றும் யாஸ்மின் தாஜ் ஆகியோர்கள் ஒருங்கிணைத்தனர். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ மற்றும் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இறுதியில், விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஐஸ்வர்யா நன்றியுரை கூறினார்.