Close
ஜனவரி 10, 2025 7:30 காலை

கொடிக்குளம் கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழகத்தில் மாநகராட்சியோடு பல்வேறு ஊர்கள் இணைக்கப்படும் என்று சமீபத்தில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், பல்வேறு ஊர்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில பகுதிகளில் மக்கள் ஆதரவு தந்த வண்ணம் உள்ளனர். கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை அடுத்து உள்ள கொடிக்குளம் தனித் தொகுதியான கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் , அந்த பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

இதில் வனிதா மற்றும் அன்ன லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளதாவது:-
எங்கள் பகுதிகளை மாநகராட்சி உடன் இணைத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள் அன்றாட கூலித் தொழில் செய்பவர்கள் , விவசாயத்தை நம்பியே வாழ்கிறோம்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பாதிக்கப்படும். மாநகராட்சியில் எங்களுடைய பகுதிகள் இணைக்கப்பட்டால் வரி உயர்வு , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பாதிப்பு , விவசாய நிலம் பாதிப்பு போன்றவை நடைபெறும் ஆகையால் எங்களுக்கு மாநகராட்சி உடன் இணைய எங்களுக்கு விருப்பமில்லை, நாங்கள் கிராமமாகவே இருந்து கொள்கிறோம் என மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top