Close
ஜனவரி 22, 2025 7:18 மணி

மாடுகளுக்கு வண்ணம் பூசி மாட்டுப் பொங்கல் கொண்டாடிய அமைச்சர் வேலு

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய அமைச்சர் வேலு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில், நேற்று மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாடுகளை மகிழ்விக்கும் வகையில் மாடுகளுக்கு படையல் போட்டு பொங்கல் வைத்து விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் அவரவர் தங்களுடைய பகுதிகளில் மாட்டுப் பொங்கல் தினமான நேற்று  விவசாயம் சிறப்பாக செய்ய ஒத்துழைத்த மாடுகளை மகிழ்வித்து கௌரவிக்கும் விதமாக வண்ண வண்ண கோலங்கள் இட்டு புது மண் பானையில் புத்தரிசி மற்றும் வெள்ளம் சேர்த்து பொங்கல் வைத்து மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து மலர்கள் அணிவித்து மா மற்றும் ஆவாரம் பூவை கொண்டு தோரணங்கள் கட்டி வாழை இலையில் படையல் இட்டு மாட்டிற்கு உணவளித்து மகிழ்ச்சியுடன் விவசாயிகள் கொண்டாடினர்.

அமைச்சர் கொண்டாடிய மாட்டுப் பொங்கல்

அமைச்சர் எ.வ.வேலு, தனது சொந்த ஊரான சே.கூடலூர் ஊராட்சியில் தனது குடும்பத்தார் மற்றும் கழக நிர்வாகிகள், கிராம மக்களுடன் மாட்டுப்பொங்கல் திருநாளை கொண்டாடினார்.

முன்னதாக மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தனது மாடுகளின் கொம்பிற்கு கழக கொடியாம் கருப்பு சிகப்பு வண்ணம் பூசி மாடுகளை அலங்காரம் செய்து மகிழ்ந்தார்.

பின்னர் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து அங்கு உள்ளவர்கள் அனைவருக்கும் இனிப்புகள்,  பரிசுகள் ,  வேட்டி சேலைகள் ஆகியவைகளை அமைச்சர்  வழங்கினார்.   இந்நிகழ்வில்  அருணை கல்வி குழுமத்தின் துணை தலைவர் எ.வ.வே.குமரன் அவர்கள் மற்றும் கழக மருத்துவரணி துணைத் தலைவர்  எ.வ.வே.கம்பன் , குடும்பத்தினர், கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாட்டுப் பொங்கலை கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர்

தைத்திருநாள் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான தரணிவேந்தன் அவரது பண்ணையில் வளர்த்து வரும் மாடுகளுக்கு வர்ணம் தீட்டி புது கயிறுகள் மாற்றி மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். உடன் கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி மந்தைவெளிகளில் மாடுகளை அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்தனா்.

அக்ராபாளையம் கிராமத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் காளைகள், பசுக்களின் கொம்புகளை சீவி வண்ணம் தீட்டி, வண்ண மலா் மாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்துடன் அங்குள்ள முருகன் கோயில் திடலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்தனா். பின்னா், கலசத்தில் கொண்டுவரப்பட்ட புனித நீா் தெளித்து மரியாதை செய்து வழிபட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

அக்ராபாளையம் கிராமத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் காளைகள், பசுக்களின் கொம்புகளை சீவி வண்ணம் தீட்டி, வண்ண மலா் மாலைகள் அணிவித்து, சிறப்பு அலங்காரத்துடன் அங்குள்ள முருகன் கோயில் திடலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்தனா். பின்னா், கலசத்தில் கொண்டுவரப்பட்ட புனித நீா் தெளித்து மரியாதை செய்து வழிபட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top