Close
ஜனவரி 22, 2025 10:02 மணி

நாமக்கல் முன்னாள் எம்.பி., ராசிபுரம் சுந்தரம் காலமானார்

முன்னாள் எம்.பி. ராசிபுரம், பி.ஆர். சுந்தரம்.

நாமக்கல் முன்னாள் எம்.பி., ராசிபுரம் பி.ஆர். சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 73.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஆர். சுந்தரம் (73). இவர் விவசாயக் குடும்பத்தில் 1951ம் ஆண்டு ஏப். 2ம் தேதி பிறந்தார்.

அதிமுகவில் இணைந்த அவர் கடந்த 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல்களில், ராசிபுரம் சட்டசபைத் தொகுதியில், அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நாமக்கல் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் சில மாதங்கள் அதிமுகவில் இருந்து விலகி இருந்த பி.ஆர்.சுந்தரம், கடந்த 2021 ஜூலை 11 அன்று திமுகவில் இணைந்தார்.

தற்போது திமுகவில் துணை கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று 16ம் தேதி, வியாழக்கிழமை காலை ராசிபுரம் அருகே உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு சுந்தரி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top