Close
ஜனவரி 22, 2025 1:36 மணி

நாமக்கல் ஒன்றியத்தில் 81 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 81 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவுரையின் படி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதலின் பேரில், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில், நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்பேது, பள்ளி செல்லா குழந்தைகள், 81 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் கள ஆய்வுப் பணி, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டி குறவர் காலனியில் நடந்தது. அங்கு, நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை தராத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கற்பகம் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை தராமல் இருந்த, 20 மாணவர்களை, அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு, வீடு வீடாகச் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து, நாளை முதல், அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் உறுதி அளித்தனர். மேலும், கும்பகோணம் பகுதியில் இருந்து நாமக்கல் பகுதிக்கு புதியதாக வந்துள்ள 2 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள், பெரியப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
நாமக்கல் ஒன்றியத்தில் நடந்த இந்த கள ஆய்வுப்பணியில், வட்டர வள மைய மேற்பார்வையாளர் சசிராணி, மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணலட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கவிதா, கோமதி, கோகிலா, பிரியதர்ஷினி, ரவிக்குமார், தனபால், நிஜாம் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top