Close
ஜனவரி 22, 2025 1:35 மணி

அகில இந்திய வங்கி தேர்வில் முதலிடம்: ராசிபுரம் மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

வங்கி தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற வல்லரசுவிற்கு, நாமக்கல் கலெக்டர் உமா, சால்வை அணிவித்து பாராட்டினார்.

அகில இந்திய வங்கி தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற ராசிபுரம் மாணவருக்கு, நாமக்கல் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் – மணிமேகலை தம்பதியரின் மகன் வல்லரசு (24). இவரது தந்தை சிறு வயதிலேயே இறந்த நிலையில் தாயார் கூலி வேலை செய்து வல்லரசுவை படிக்க வைத்துள்ளார்.

தனது குடும்ப வறுமையிலும் விடாமுயற்சியின் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி முதலிடம் பெற்ற வல்லரசு, தொடர்ந்து, பிளஸ் 2 படித்து, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி (அக்ரி) படித்து முடித்தார்.

பின்னர், தனியார் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து, கடந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய கிராமப்புற வங்கி (ஆர்பிபி) தேர்வில் கலந்துகொண்டு, தேர்வு எழுதி 100க்கு 72.28 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வல்லரசுவிற்கு மாவட்ட ஆட்சியர் உமா சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top