Close
ஜனவரி 30, 2025 10:14 மணி

மாயமான எலக்ட்ரீசியன் உடல் பாலாற்றில் மீட்பு..!

கோப்பு படம் -மாதிரிக்காக

காஞ்சிபுரம் பாலாற்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்த இளைஞர் மாயமான நிலையில், இன்று 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வளத்தோட்டம் பகுதியில் அவரது உடல் தீயணைப்பு துறையால் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகி. இவரது மகன் திலீப் குமார் ஐடிஐ படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற திலீப்குமார் செவிலிமேடு பாலாறு பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிக் கொண்டு தனது நண்பரான வரதராஜ் என்பவரிடம் பாலாற்றில் கரையோரம் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

இந்நிலையில் வரதராஜன் உணவு வாங்க சென்ற நிலையில் திலீப் குமார் அருகில் பாலாற்று நீரில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமாகி உள்ளார்.

உணவு வாங்கிக் கொண்டு வந்த வரதராஜன் அவரை அங்கு தேடிய நிலையில் அவரது உடை மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வீடு திரும்பி உள்ளார்.

காணாமல் போன திலிப் குமார் இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் அவரது தாய் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையிடம் புகார் அளித்தல் நிலையில் அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது வரதராஜன் மற்றும் திலீப் குமார் மது அருந்திய விவகாரம் செல்போன் மூலம் அறிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தேடிவந்த நிலையில் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள வளத்தோட்டம் பாலாற்றின் கரை ஓரம் ஒதுங்கிய நிலை அதனை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக தாலுகா காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top