Close
ஜனவரி 30, 2025 11:05 மணி

பரவையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் நிலையம், நிழல் குடை திறப்பு..!

புதிய குடிநீர் நிலையம் மற்றும் பேருந்து நிழற்குடை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2வது வார்டு ஊர் மெச்சி குளத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் 11 வது வார்டுஅண்ணா நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்புவிழா நடந்தது.

இந்த விழாவிற்கு பரவை பேரூராட்சி தலைவர் கலாமீனா ராஜா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜீலான்பானு முன்னிலை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா வரவேற்றார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குடிநீர் நிலையம் மற்றும் நிழல் குடையினை திறந்து வைத்தார்.

இதில் வார்டு கவுன்சிலர்கள் சௌந்திரபாண்டி. வின்சி. செபஸ்தியம்மாள் மாரியம்மாள் திருஞானகரசி, முன்னாள் மேயர் திரவியம் அவைதலைவர் நாகமலை, கீதா , செந்தில், ஜெயராஜ் மனோஜ் குமார், முத்துநாயகம், சீனிவாசன் ராஜ்குமார், ராஜு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வரிதண்டலர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top