Close
ஜனவரி 30, 2025 7:13 மணி

பணியின் போது தூங்கிய நாய்க்கு தண்டனை

சீனாவின் கோமாளித்தனம் அளவுக்கு மீறி வருகிறது. நாயையே இப்படி நடத்தும் சீனா மனிதர்களை எப்படி நடத்தும் என யூகித்துக் கொள்ளுங்கள்.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள போலீஸ் நாய் காவல்துறையின் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றி வருகிறது.

பிறந்து 4 மாதத்தில் போலீஸ் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நாய்க்குட்டிக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு, பின்னர் காவல்துறையில் முழு நேரம் பணியாற்றும் மோப்ப நாய் அந்தஸ்த்தும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் பணியின் போது தூங்கியதற்காக இந்த நாய்க்கு வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு கிண்ணத்திலேயே சிறுநீர் கழித்த புகாரிலும் இந்த நாய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு அபராதமாக நாய்க்கு வழங்கப்படும் கூடுதல் தின்பண்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.

இந்த தகவல் உலக அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் சீனாவின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

ஒரு நாயை இந்த பாடு படுத்தும் சீனா? மனிதர்களை என்ன பாடுபடுத்தும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நல்ல வேளை நாம சீனாவில் பிறக்கவில்லை என்று கூட பலர் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

அதெல்லாம் சரி! தனக்கு தண்டனை கொடுத்துள்ளார்கள் என்று அந்த நாய்க்கு தெரியுமா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top