Close
ஏப்ரல் 23, 2025 12:14 காலை

விமானம் மூலம்ஆமை கடத்தி வந்த நபர் மதுரை விமான நிலையத்தில் கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இருந்து தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்களை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்
இலங்கையிலிருந்து நேற்று மதுரைக்கு ஸ்ரீலங்கன் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை இட்டனர்.
அதில், இரண்டு பெண்கள் தங்களது பெட்டிகளில் தடை செய்யப்பட்ட இந்தோ சீனிஸ் பாக்ஸ் ஆமைகள் 13 எண்ணிக்கையில் கடத்தி வந்தது தெரிய வந்தது மேலும், விசாரணையில் இவர்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாவித்திரி (வயது 36) திருப்பூர் பகுதியைச் சேர்ந்த உஷா (வயது 31)என தெரியவந்தது.

இது குறித்து, சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து இரண்டு பெண்களையும் கைது செய்து அவர்கள் கடத்திவைந்த ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட ஆமைகளை இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை கடத்தி வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top