சிறப்பு பூஜைகளுடன் 3வது காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியினை தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி , ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்தும் மூன்றாவது மாபெரும் புத்தக திருவிழா-2025 இன்று மாலை தொடங்கப்படவுள்ளது.
இப்புத்தக திருவிழா 31.01.2025 முதல் 11 நாட்கள் நடைபெறுகின்றது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 100க்கும் புத்தக அரங்குகள், 1000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், அமைக்கப்பட்டு, இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டவுள்ளன.
இதன் துவக்க விழா இன்று மாலை அவ்வளாகத்தில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி, ஆட்சியர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து துவக்கி வைத்தனர்.
முதல் அரங்கில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சி காமாட்சியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை மேற்கொண்ட பின் குத்து விளக்கேற்றினர்.
இதனை தொடர்ந்து புத்தக அரங்குகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்ட பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மாநகராட்சி மாமன்ற மேயர் மகாலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்