Close
பிப்ரவரி 1, 2025 5:01 மணி

சோழவந்தான் காமராஜர் பள்ளியில் ஆண்டு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு , சிவபாலன் தலைமை தாங்கினார். உறவின்முறை மூத்த உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

பள்ளி த்தாளாளர் பென்சாம் வரவேற்புரை ஆற்றினார் . பள்ளி முதல்வர் கலைவாணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, நாடார் மகா ஜன சங்க பள்ளிகளின் செயலாளர் ஐசக் முத்துராஜ், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ , மாணவிகளின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணை முதல்வர் நித்தியா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top