திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த பூச்சி அத்திப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா வேப்பம்பட்டு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ண சுவாமி மற்றும் ஸ்ரீ மஹா லஷ்மி ஆகிய இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளது.
இந்த கோவில்களை கிராம மக்களின் பங்களிப்புடன் புதுப்பித்து 3.ஆவது நூதன ஆலய ஜீரோ தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குருவாயல் முரளி பட்டாச்சாரியார் தலைமையில் கொண்ட 10.க்கும் மேற்பட்ட குழுவினர் கடந்த 31ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு அங்குரார்பணம், கலச சத்பனம், பூரணாஹீதி, நடைபெற்ற பின்னர் மகா தீப ஆராதனை கட்டப்பட்டது.
தொடர்ந்து யாக குண்டம் அமைத்து யாக பூஜைகள் நடைபெற்றது.இதனை அடுத்து அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மகா ஷாந்தி,திருமஞ்சனம், யாக பூஜை, கோ பூஜை நடைபெற்றது.
2 ஆம் தேதி பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை யாக பூஜைகள் நடந்த முடிந்த பின்னர் யாகசாலையில் இருந்து கலசங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேல தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து ஆலயங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவர்களுக்கு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மாலை 7 மணி அளவில் திருக்கல்யாணமும், தொடர்ந்து சுவாமி திருவிதி விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்..