Close
பிப்ரவரி 23, 2025 6:08 மணி

நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த இந்துமதி மற்றும் அவரது குழந்தைகள் யாத்விக் ஆர்வின், நிவின் ஆதிக்

நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பெரிய மணலி அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

அவருக்கு இந்துமதி என்ற மனைவியும் யாத்விக் ஆர்வின் மற்றும் நிவின் ஆதிக் என இரு மகன்கள் உள்ளனர். அவர் தனது குடும்பத்துடன் நாமக்கல், அண்ணா நகர் போதுப்பட்டி காலனி பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு கோயில் திருவிழாவிற்காக வந்துள்ளார்.

இந்த நிலையில் காலையில், யாத்விக் ஆர்வின் வயது (3) வீட்டின் முன்புறமுள்ள நிலைத் தொட்டியில் தவறி விழுந்து உள்ளார். அதைக் கண்ட அவரது அம்மா இந்துமதி தனது நிவின் ஆதித் என் 11 மாதம் குழந்தையை கையில் வைத்துள்ளவாறு, மூத்த மகன் யாத்விக் ஆர்வினை மீட்க முயற்சித்துள்ளார். அப்போது அவரும் கைக்குழந்தையுடன் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார்.

இதனால் தாய் மற்றும் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மூவரது உடல்களையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top