Close
பிப்ரவரி 23, 2025 4:32 மணி

திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையுத்தரவு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்கா கந்தூரி ஆடு கோழி பலியிடும் விவகாரத்தை தொடர்ந்து இந்து முன்னணி என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து போலீஸார் 144 தடை விதித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி, பாஜக வினர் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருப்பரங்குன்றம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 144 தடைவிதித்துள்ளனர்.
போலீசார் தடை விதித்துள்ளதால் நமது இன்று ஊர்வலமாகவும் பேரணியாகவும் செல்ல கூடாது எனவும் கூட்டமாக ஐந்து பேர் சேர்ந்து செல்லக்கூடாது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்னர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் மேலும் வணிக நிறுவனங்கள் வழக்கமாக செயல்பட அனுமதி வழங்கியுள்ளது என்று  காவல்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
திருப்பரங்குன்றம் காவல் துறை அறிவிப்பை தொடர்ந்து அதிகாலை முதலே பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில கடைகள் மட்டுமே திறந்துள்ளன.

சுற்றுலா பகுதியாகவும் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடாகவும் விளங்கும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் 144 தடை உத்தரவால் பரபரப்பாக காணப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top