மதுரை மாவட்டம் சோழவந்தான் மன்னாடி மங்கலம் இரும்பாடி ஆகிய மூன்று கிராமங்களில் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் அரசு மதுபான கடை 4 தனியார் மதுபான கடை ஒன்று என மொத்தம் ஐந்து மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது
இதில் தனியார் மன மகிழ் மன்றத்தை தவிர மற்ற நான்கு அரசு மதுபான கடைகளிலும் பார் வசதி இல்லாததால் மது பிரியர்கள் மதுக்கடைகளின் அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் தனியாருக்கு சொந்தமான தோப்புகளிலும் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது
அவ்வாறு மது அருந்துபவர்கள் காலி மது பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். மேலும், விவசாய நிலங்களில் தூக்கி எறிந்து விட்டும் செல்கின்றனர்.
இதனால், உடைந்த மது பாட்டில்கள்விவசாய பணிகள் செய்யும் கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் ஆகியோர்களின் கால்களை பதம் பார்க்கிறது.
மேலும் தோப்புகளில் ஆங்காங்கே மது பாட்டில்கள் சிதறி கிடப்பதும் நெல் வயல்களிலும் உடைந்த மது பாட்டில்கள் சிதறி கிடப்பதுமாக விவசாய நிலங்கள் பாழ்படும் சூழ்நிலை ஏற்படுகிறது
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு அரசு மதுபான கடைக்கும் பார் வசதியை ஏற்படுத்தி மது பிரியர்கள் விவசாய நிலங்களை சேதப்படுத்தாதவாறு பார்களில் அமர்ந்து மது அருந்த அரசு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்
பார் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் மது பிரியர்களிடம் இருந்து விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும் வயல் வேலைகளை பாதுகாப்பான முறையில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆகையால், மதுபான கடைகளுக்கு அனுமதி தரும் போதே அதனை ஒட்டி பார் வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என, விவசாயிகள் மற்றும் மது பிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.