நாமக்கல் புத்தகத்திருவிழாவிற்கு மொத்தம் 45 ஆயிரம் பேர் வருகை புரிந்தனர். ரூ. 45 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளர்.
நாமக்கல் நகரில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலத்துறை சார்பில், 3ம் ஆண்டு புத்தக திருவிழா, 10 நாட்கள் நடைபெற்றது.
நிறைவு விழாவில், கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 3ம் ஆண்டு புத்தகத் திருவிழா பிப். 1ல் தொடங்கி, 10 நாட்கள் நடைபெற்றது. புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் உணர வேண்டும். 3ம் புத்தக திருவிழாவிற்கு, 9-ம் நாள் வரை 48,000 பார்வையாளர்கள் வருகை தந்து, 30,000 புத்தகங்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், ரூ. 45 லட்சம் மதிப்பில் புத்கங்கள் விற்பனை செய்யபட்டுள்ளது.
இதன் மூலம் மொபைல் போன்கள் தவிர்க்க முடியாத இந்த காலத்தில் கூட புத்தக வாசிக்க அனைவரும் ஆர்வமுடன் உள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஆண்டும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, சிறப்பான பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்கள், கலைக்குழுவினருக்கு, பாராட்டு சான்றும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. முன்னதாக கலைச்சுடர் விருதுபெற்ற நாமக்கல் பிரபு வேணுகோபால் குழுவினரின் கிளாரினெட் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது.