பள்ளி மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை நாமக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (53). இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் செல்வக்குமார் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் ஆசிரியர் செல்வக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நாமக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்ததை தொடர்ந்து பிசியோதெரப்பி பயிற்சியாளர் கண்ணன் (35) என்பவரை குமாரபாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.