Close
பிப்ரவரி 23, 2025 4:19 காலை

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

ராஜேஷ்குமார், எம்.பி

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு, சட்டப்படி ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ராஜேஷ்குமார் எம்.பியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார்.

மாநிலங்களவையில் நடைபெற்ற, கேள்வி நேரத்தில் திமுக எம்.பி. நாமக்கல் ராஜேஷ்குமார் நிதித்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பங்கஜ் சவுத்திரியிடம் துணைக் கேள்வி ஒன்றை எழுப்பி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: 1994ம் ஆண்டு நிதி சட்டத்தின்படி, விவசாயத்திற்காக போர்வெல் தோண்டுவதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறதா? ஜிஎஸ்டி விதிவிலக்கு தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? அல்லது தேவையற்ற முறையில் வரி விதிக்கப்படுகிறதா?.

இத்தகைய தவறான விளக்கங்களை நிவர்த்தி செய்வதற்கும், நாடு முழுவதும் விதிவிலக்கை சீராகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில்களின் நலனுக்காக வரிவிலக்கைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:
1994ம் ஆண்டு நிதிச் சட்டத்தின்படி சேவை வரி அட்டவணையில், எந்தவொரு விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் வழங்குவதற்காக போர்வெல் கிணறுகளைத் தோண்டுவது போன்ற சேவைகள் எதிர்மறைப் பட்டியலின் வரம்பிற்கு உட்பட்டது.

பயிர் சாகுபடி, அறுவடை, கதிரடித்தல், தாவரப் பாதுகாப்பு அல்லது சோதனை உள்ளிட்ட எந்தவொரு விவசாயப் பொருட்களின் உற்பத்திக்கும் நேரடியாகத் தொடர்புடைய விவசாய நடவடிக்கைகளின் மூலம் விவசாயம் அல்லது விவசாயப் பொருட்கள் தொடர்பான சேவைகளுக்கு, 1994ம் ஆண்டு நிதிச் சட்டத்தின்படி, ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

உணவு, நார், எரிபொருள், மூலப்பொருள் அல்லது பிற இதுபோன்ற விவசாய விளைபொருட்கள், விவசாய நடவடிக்கைகளின் மூலம் தாவரங்களை வளர்ப்பது மற்றும் அனைத்து வகையான விலங்குகளின் வளர்ப்பையும் தவிர சாகுபடி, அறுவடை, கதிரடித்தல், தாவர பாதுகாப்பு அல்லது சோதனை உட்பட எந்தவொரு விவசாய விளைபொருளின் உற்பத்திக்கும் நேரடியாக தொடர்புடையது. ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் எந்தவொரு விளக்கங்களும் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என அவர் பதில் அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top