Close
பிப்ரவரி 23, 2025 4:56 காலை

ஓடும் காரில் திடீர் தீ , சுதாரித்து கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்   கண்ணன். இவர்   மதுரை பைபாஸ் சாலை போடி லயன். காளவாசலில் இருந்து பைபாஸ் ரோடு நேரு நகர் நோக்கி விஓசி பாலத்திற்கு கீழே வாகனத்தை பழுது நீக்குவதற்காக அவரது மாருதி 800 ஓட்டி வந்துள்ளார்.

அப்பொழுது, திடீரென இன்ஜினில் இருந்து புகை வந்து மளமளவென எரிய தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட கண்ணன் , வாகனத்தில் இருந்து இறங்கி அருகில் இருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்து மணல் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
எனினும் , மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் சுரேஷ் கண்ணா தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டார் .
தகவல் கொடுத்த மூன்று நிமிடத்திற்குள் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படுத்திருக்கலாம் எனவும் , விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர்
சம்பவம் குறித்து, எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் சிசிடிவி கட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top